கோவை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி

கோவை அருகே ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத விரக்தியில், பாஸ்புக் பதிவு செய்யும் இயந்திரம், காசோலை செலுத்தும் இயந்திரம் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அன்னூர் அருகேயுள்ள ஒற்றர்பாளையத்தில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகே உள்ள ஏடிஎம் மைய வளாகத்தில் பணம், காசோலை செலுத்தும் இயந்திரம், பாஸ்புக் பதிவு செய்யும் இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை ஏடிஎம் மையத்தில் இருந்து அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டது. வங்கி அருகே இருந்த காவலாளி ரங்கசாமி வந்து பார்த்த போது, ஏடிஎம் மையத்துக்குள் இருந்து வெளியே வந்த மர்மநபர் ஒருவர் தப்பி ஓடினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sjA5EH
via
No comments