ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோயம்பேடு சந்தையில் குவிந்த வியாபாரிகள் கூட்டம்: கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரம்

கோயம்பேடு சந்தைக்கு ஞாயிற்றுக் கிழமையான இன்று விடுமுறை என்பதால் காய்கறிகளை வாங்கநேற்று வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. இது ஒருபுறமிருக்க, கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
தமிழகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபாரம் செய்வதற்கு சனிக்கிழமை (நேற்று) முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வியாபாரிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சில்லறை வியாபாரத்துக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக, சில்லறை வியாபாரிகளுடன் அதிகாரிகள் நாளை நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a14VvD
via
No comments