மராமத்துப் பணிகள் காரணமாக நீர்வரத்து குறைப்பால் வீராணம் ஏரி வறண்டது

மராமத்துப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வீராணம் ஏரியின் நீர்வரத்து குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இந்த ஏரியின் மொத்தகொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரி 18 கி.மீ. நீளமும், 8 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரிக்கான தண்ணீர் மேட்டூர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஏரி மூலம் 44,450 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a2Jfin
via
No comments