காஞ்சிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவக் கழிவுகள், முறையான விதிமுறைகளை பயன்படுத்தி அழிக்கப்படாமல் குப்பை கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது சிரஞ்சிகள், பஞ்சு, கையுறைகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி முடித்த பின்பு மருத்துவக் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dSewFY
via
No comments