Breaking News

ரசிகரின் செல்ஃபி தொந்தரவு; செல்போனை பிடுங்கி எச்சரித்த நடிகர் அஜித்!

நடிகர் அஜித் வாக்களிக்க சென்றபோது, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்து தொந்தரவு செய்ததால், அவரது செல்போனை பிடுங்கி எச்சரித்துவிட்டு, பின்னர் செல்போனை அவரிடமே தந்துவிட்டார்.

நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள சென்னை பெருநகர் தொடக்கப்பள்ளியில் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவிருந்த நிலையில் சரியாக 6:30 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்தார் அஜித். அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்ற அஜித் - ஷாலினி ஆகியோருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முற்பட்டனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடத் தொடங்கியது.

இதைத் தவிர்க்கும் வகையில் அங்கிருந்த காவல்துறையினர் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஆகியோரை 6.40 மணி அளவில் வாக்கு சாவடி மையத்திற்குள் அழைத்து வந்தனர். இருந்தபோதிலும் அவருடன் சில ரசிகர்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் தொடர்ந்து செல்ஃபி எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். இதைப் பார்த்த அஜித் முதலில் வெளியேறுமாறு அவர்களை எச்சரித்தார். ஆனால், தொடர்ந்து ரசிகர் ஒருவர் செஃல்பி எடுத்துக் கொண்டே இருந்ததால் அவரின் மொபைலை அஜித் பிடுங்கிக் கொண்டார். பின்பு அவரிடமே கொடுத்து எச்சரித்து அனுப்பினார்.

அதன்பிறகு, 6.55 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் ஆளாக அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் வாக்குப் பதிவு செய்து திரும்பினர். கொரோனா அச்சம் மட்டுமின்றி, வாக்களிக்கும் மக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் ரசிகர்கள் சிலர் நடந்துகொண்டதால், அஜித் மிகுந்த கோபமடைந்ததாக தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wFzYXw

No comments