தேர்தல் தகராறு வழக்கில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் மகன் உள்ளிட்டோரை பிடிக்க தீவிரம்
தேர்தல் தகராறு வழக்கில் சட்டப்பேரவை துணை சபாநாயகரின் மகன் உள்ளிட்டோரை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில், கடந்த 28-ம் தேதி திமுக வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்தஅதிமுகவினருக்கும், பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அப்பகுதி திமுகபிரமுகர் பார்த்தசாரதி, வடக்கிபாளையம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார், பொள்ளாச்சி தொகுதி அதிமுகவேட்பாளரும், சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், அவரதுமகன் பிரவீன், கட்சி நிர்வாகிகள்நாமகிரிராஜ், வீராசாமி, சதீஷ்குமார், நாகமாணிக்கம் உள்ளிட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2R3FsuO
via
No comments