Breaking News

முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம்: அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த முஸ்லிம் பெண்

முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் அமித்ஷா முன்னிலையில் நேற்றுமுன்தினம் பாஜகவில் இணைந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பாத்திமுத்து (51). இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் முத்தலாக் தடை சட்டத்தை ஆதரித்தும், 15 ஆண்டுகளுக்கு முன் அந்தச் சட்டம் வந்திருந்தால் தன் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39EOvsp
via

No comments