திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலர்கள் விஷமருந்தி தற்கொலை

மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கம் அரசன்கழனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆண்-பெண் சடலங்கள் கிடப்பதாக பெரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த அபினாஷ் (30), அவரது அத்தை மகள் பல்லவி(21) என்பதும், இருவரும் பெங்களூரு ஆர்.கே.புரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
பட்டதாரிகளான இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g8QGc0
via
No comments