Breaking News

வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்- குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு சாலை மறியல்

காஞ்சிபுரம் அருகே வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்றுமருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே உள்ளகாரை கிராமத்தைச் சேர்ந்தவர்அழகரசன் (42). வழக்கறிஞராக உள்ளார். இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காரை கிராமத்தைச் சேர்ந்த வேலு, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32eg0F2
via

No comments