Breaking News

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை போத்தனூரை சேர்ந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன் (36). இந்து முன்னணி அமைப்பின் உக்கடம் நகர துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு போத்தனூர் சங்கம் வீதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் தாக்கப்பட்டு, காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fZ0zc9
via

No comments