Breaking News

தமிழக அரசின் புதிய உத்தரவால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகள்

தமிழக அரசின் புதிய உத்தரவால், சென்னை மெரினா, பெசன்ட்நகர் எலியட்ஸ், மாமல்லபுரம் கடற்கரைகள் நேற்று மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. ஏற்கெனவே கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், `சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூடுவது11-ம் தேதி முதல் தடை செய்யப்படுகிறது' என புதிய கட்டுப்பாட்டை தமிழக அரசு அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uFix7y
via

No comments