மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப பணியாளர் என கரோனா சிகிச்சைக்காக 10 ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சைக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 10 ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 136 படுக்கை வசதிகள் கொண்ட தாமத
மில்லா (ஜீரோ டிலே) வார்டை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yxcNzu
via
No comments