Breaking News

முதல்வரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி வரவு

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டும் என்று கடந்த 11-ம் தேதி முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையேற்று மே 23-ம் தேதி வரை மொத்தம் ரூ.181 கோடி முதல்வர் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது. நன்கொடை அளித்தவர்களுக்கு அரசின் சார்பில் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இணையவழியில் https://ift.tt/34a538z நன்கொடைகளை தொடர்ந்து அளிக்க முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QLlZPN
via

No comments