30 ஆண்டுகளாக மக்கள் ஏக்கத்துடன் காத்திருப்பு; திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கு விடியல் கிடைக்குமா? - நல்ல முடிவு எடுப்போம் என அமைச்சர் மஸ்தான் உறுதி

திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆட்சியிலாவது விடியல் கிடைக்குமா என்று பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
கடந்த 1991-ம் ஆண்டு திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் கரியாலி அறிவித்தார். அந்த அறிவிப்போடு திண்டிவனம் பேருந்து நிலைய பணிகள் நின்றுபோனது. அதைத்தொடர்ந்து 2001-ம் ஆண்டு அப்போதை திண்டிவனம் எம்எல்ஏவும் அமைச்சருமான சி.வி.சண்முகம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முயன்றார். அதற்கு அப்போதைய அதிமுக நகர்மன்ற தலைவர் ஹீராசந்த் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முருகம்பாக்கம் ஏரி அருகே நகராட்சிக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை வாங்கிஅதை புதிய பேருந்து நிலையத்திற்கு பயன்படுத்த முடிவெடுக்கப் பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hyszUI
via
No comments