குமரியில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரம்; பயிர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை இடுபொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம், பயிர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மிக கன மழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசித்த 767 பேர் 16 நிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன. பாதிப்பு ஏற்படும் என கருதப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் முன்கூட்டியே தங்க வைக்க அரசு மேற்கொண்ட முயற்சியால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hZqyRH
via
No comments