Breaking News

காய்ச்சல் கண்காணிப்பு பணியாளர்கள் கரோனா தடுப்பூசி அவசியம் குறித்து பொதுமக்களிடம் விளக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனா காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் சுமார் 12 ஆயிரம் காய்ச்சல் கண்காணிப்புப் பணியாளர்கள், 2 ஆயிரம் தன்னார்வலர்களின் சிறந்த பணிக்காக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட உள்ளவர்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் முக்கிய பணியை காய்ச்சல் கண்காணிப்புப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wi2XzG
via

No comments