Breaking News

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா வார்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லை: நோயாளிகளும், உறவினர்களும் கடும் சிரமம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா வார்டுகளில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகளும், உடன் இருக் கும் உறவினர்களும் சிரமப் படுகின்றனர்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கரோனா சிகிச்சை மருத்துவ மனையாக மாற்றப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனை வார்டுகள், சித்தா மருத்துவமனை வார்டுகளில் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருக்கின்றன. கழிப்பிட அறை பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நோயாளிகளுக்கு வழங்கப்படும் சாப்பாடும் தரமில் லாமல் உள்ளது. செவிலியர்கள், மருந்துகளை வழங்கிச் சென்று விடுகின்றனர். அதை நோயா ளிகளுக்கு அவர்களுடன் இருக்கும் உறவினர்கள்தான் கொடுக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகளும், உறவினர்களும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rsg42c
via

No comments