’இதுவும் கடந்து போகும்’ -சித்ஸ்ரீராம் குரலில் வெளியாகிறது நெற்றிக்கண்ணின் ஃபர்ஸ்ட் சிங்கள்

நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
‘இதுவும் கடந்து போகும்’ பாடலை பிரபல பிண்ணனி பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்தப் பாடலின் உருவாக்கம் தொடர்பான சில காட்சித்துணுக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.
First Single from #Netrikann coming soon! #Nayanthara #IthuvumKadanthuPogum @Milind_Rau @ggirishh @VigneshShivN@Rowdy_Pictures @RDRajasekar @dhilipaction @SonyMusicSouth pic.twitter.com/dm86ZIxb6b
— sridevi sreedhar (@sridevisreedhar) May 20, 2021
முன்னதாக, தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில், அவர் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் நெற்றிக்கண். பார்வைச் சவால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அவருக்கு இந்தப்படம் 65-ஆவது படமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு படத்தின் டீஸர் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.
நடிகர் சித்தார்த்-ஆண்டிரியா நடிப்பில் வெளியான “அவள்” படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் நெற்றிக்கண் படத்தை இயக்கியுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மெரினா படத்திற்கு இசையமைத்த கிரிஷ் கோபாலக்கிருஷ்ணன் இசையமைக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wk2z3r
No comments