Breaking News

குரோம்பேட்டையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம்: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார்

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் இரண்டாவது சித்த மருத்துவ கரோனா சிகிச்சைமையம் 150 படுக்கை வசதிகளுடன் குரோம்பேட்டையில் வைஷ்ணவா கல்லூரியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் ஏற்கெனவே 100 படுக்கை வசதியுடன் கரோனா பரிசோதனையில் லேசான அறிகுறிஉள்ளவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் 150 படுக்கை வசதியுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2S9lTlc
via

No comments