Breaking News

தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவை மதிக்காமல் - கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை கட்டண கொள்ளை: கடன் வாங்கியும், நகைகளை விற்றும் பணத்தை செலுத்தும் பொதுமக்கள்

தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல், கார்ப்பரேட் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடன் வாங்கியும், நகையை விற்றும் பணத்தை செலுத்தவேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு கரோனா சிகிச்சைமையம் அமைத்து தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொற்று அதிகரித்ததால், தனியார்மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்க அரசு அனுமதியளித்தது. மேலும், லேசானது முதல் தீவிர சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை என கட்டணத்தை அரசு நிர்ணயித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2R48WsQ
via

No comments