Breaking News

புதுவை காங். முன்னாள் எம்எல்ஏ ஜெயமூர்த்தி மாரடைப்பால் மரணம்

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (62), கடந்த 2016-ம் ஆண்டு இத்தொகுதியில் காங்கிரஸில் போட்டியிட்டு வென்ற இவர், இம்முறை தோல்வியடைந்தார். நேற்று காலை கரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டில் மதியம் உணவு சாப்பிடும் போது நெஞ்சு வலியால் திடீரென்று மயங்கினார். அதையடுத்து அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி தரப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம் மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். இரு முறை எம்எல்ஏவாக இருந்த ஜெயமூர்த்திக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v5yK6r
via

No comments