Breaking News

சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அறிவுரை

சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளிடம் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார்.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே நடைபெறுகிறது. மேலும் இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால், அதில் மோசடிகளும் அதிகரித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3b1cmn1
via

No comments