Breaking News

கோயில் சொத்துகள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு

கோயில்களின் சொத்துகள் குறித்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற இந்து சமய அறநிலையத் துறையின் முடிவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர், சத்குரு தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது, ‘‘அறநிலையத் துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள். சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hLwJJ8
via

No comments