Breaking News

சென்னையில் கரோனா தொற்று பரவல் 2 சதவீதமாக குறைந்தது: ஒரே மாதத்தில் 10 மடங்கு சரிந்தது

சென்னையில் கரோனா தொற்று பரவல் 2 சதவீதமாக குறைந்தது.

சென்னையில் கடந்த ஆண்டு கரோனா தொற்று முதல் அலை பரவலின்போது, தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்தது. அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 2-வது அலை பரவலில், மிக குறுகிய காலத்தில் தொற்று படுவேகமாக பரவியது. கடந்த மே 12-ம் தேதி ஒரே நாளில் 7 ஆயிரத்து 564 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 277 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 24.41 சதவீதம் (7,564) பேருக்கு தொற்று உறுதியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wCiwme
via

No comments