Breaking News

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 55 கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 55 பேரை இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பிரிவு பதிவாளராக பணியாற்றி காத்திருப்போர் பட்டியலில் இருந்த நீதிபதி ஆர்.பூர்ணிமா, மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய நீதிபதி எஸ்.சண்முகவேல், தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wzYdpB
via

No comments