Breaking News

கூடுதல் கட்டணம், மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு தொடர்பாக அவசர கால மேலாண்மை குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்: இந்திய மருத்துவ சங்கம் தகவல்

மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு, கூடுதல் கட்டணம் என்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு, நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவ பணியாளர்களுடன் மோதலில் ஈடுபடுவதைத் தவிர்த்து மாவட்டம்தோறும் அமைக்கப்பட்டு உள்ள அவசர கால மேலாண்மைக் குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயது நபர் கடந்த 29-ம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையே, அவரது உறவினர்கள் 7 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவரை சந்தித்து, சிகிச்சை அளித்தது தொடர்பாக வும், கட்டணம் தொடர்பாகவும் விசாரித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை திட்டி, கீழே தள்ளிவிட்டு, அவரது செல்போனை பறித்துக்கொண்டு வெளியேறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vZPSue
via

No comments