Breaking News

சந்தாதாரர்களிடம் தவறான தகவலை தெரிவித்து தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வழங்கினால் நடவடிக்கை: உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆட்சியர்கள் எச்சரிக்கை

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சந்தாதாரர்களின் விருப்பத்துக்கு மாறாக தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பொருத்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், எம்எஸ்ஓக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் குமார வேல் பாண்டியன் (வேலூர்), பா.முருகேஷ் (தி.மலை) ஆகி யோர் எச்சரித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் சுமார் 914 உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் வாயிலாக மாதச்சந்தா தொகை ரூ.140 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணத்துடன் கூடிய ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 738 செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அரசு வழங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Uu9cCN
via

No comments