Breaking News

போக்குவரத்து ஊழியர் ஓய்வூதிய பலன்களை விடுவிக்க வேண்டும்: முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்று காரணமாக மிகுந்த நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையிலும், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்காக இந்தாண்டு பிப்ரவரி 28-ம் தேதி ரூ.682.70 கோடி நிதிஒதுக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட அன்றேஇந்திய தேர்தல் ஆணையம், சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த இயலவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fVZIHv
via

No comments