Breaking News

அனைவருக்கும் தடுப்பூசி கோரி குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் சார்பில் மனு: சட்டப்பேரவை கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தகவல்

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர்கள், ஆளுநர்கள் வழியாக குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அளித்து வருவதாக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா 2-வது அலை இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்தும், அதனை எதிர் கொள்வதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய பாஜக அரசு எடுக்கவில்லை. இதனால் கோடிக்கணக்கான இந்திய மக்கள் மீள முடியாத துயரத்தில் தவிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gbtlVl
via

No comments