Breaking News

ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள் ஆய்வு எப்போது?- தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்குமா?

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்பொக்கிஷ அறையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட 16 சிலைகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியும், இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக விரைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் கோயில் நகைகள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது கோயில் பொக்கிஷ அறையைத் திறந்து அதில் இருந்த நகைகள் எடுக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இந்த பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்தது. அப்போது அந்தஅறைக்குள் 16 சிலைகள் இருந்தன. இந்த சிலைகள் கோயில் ஆவணங்களில் பதிவு செய்யப்படாமல் இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UgPt9q
via

No comments