Breaking News

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெண் குழந்தைகள் மீது அதிகரிக்கும் பாலியல் அத்துமீறல்: கடந்த 2 நாட்களில் 4 பேர் கைது

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக போக்சோ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரு நாட்களில் காஞ்சி, செங்கை மாவட்டங்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செவிலிமேடு, மிலிட்டரி சாலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன்(23). இவர் பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 16 வயது சிறுமியை முறையின்றி அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சிறுமியை மீட்ட பாலுசெட்டிசத்திரம் போலீஸார் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eoxCVe
via

No comments