Breaking News

திருவள்ளூரில் மூன்றாம் பாலித்தனத்தவர்களுக்கான ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

திருவள்ளூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றில் திருத்தம் செய்யவும், புதிய ஆதார் அட்டை உள்ளிட்டவற்றுக்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று திருவள்ளூர் - காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3z0iBAU
via

No comments