அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ரூ. 2 கோடியில் காசநோய் கண்டறியும் ஆய்வகம்: மருத்துவ துறை அமைச்சர் திறந்துவைத்தார்
தாம்பரம் சானடோரியத்தில் உள்ளஅரசு நெஞ்சக மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காச நோய் ஆய்வகத்தை மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து தாம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.90 லட்சம் மதிப்பில் நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே ஊர்தி வழங்கப்பட்டது. அந்த ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, மருத்துவ கண்காணிப்பாளர் இரா.தர் மற்றும் மருத்துவஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hl6qHP
via
No comments