சென்னை மாநகராட்சியில் 746 தற்காலிக பதவிகள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
சென்னை மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக 1,896 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டன. மாநகராட்சியின் செலவீனத்தை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 1,896 பதவிகளில் 1,150 பதவிகள் அவசியம் இல்லாததாக கருதி கடந்த 2012-ம் ஆண்டு 746 தற்காலிக பதவிகளாக குறைக்கப்பட்டது.
இப்பதவிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் தொகையும் பெருகி வரும் நிலையில், இப்பதவிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்க மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு மாநகராட்சி சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது. அதை ஏற்று கடந்த வாரம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qKThw0
via
No comments