Breaking News

நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொறியாளர்கள், அலுவலர்களுக்கு ரூ.28 கோடியில் மடிக்கணினிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினிகளை வழங்கினார்.

நெடுஞ்சாலைத் துறை வெளிப்படைத் தன்மையுடன் திறமையாக இயங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ரூ.28.31 கோடி செலவில் 1,213 மடிக்கணினிகள் மற்றும் 1,484 கணினிகளை அலுவலகப் பயன்பாட்டுக்காக வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று தொடங்கிவைத்தார். அதன்படி, அவர் 7 பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yDLrXM
via

No comments