மகளிர் கிரிக்கெட்: இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து

மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிரான 5-ஆவது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் செம்ஸ்போர்டில் 5ஆவது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் பிடித்த இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி 51 பந்தில் 70 ரன் குவித்தார்.

கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 36 ரன் எடுத்தார். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க வீராங்கனை டேனி வியாட் 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டதுடன் ஆட்ட நாயகி விருதையும் பெற்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3idRpb4
via
No comments