அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் பாமக அளித்த புகார் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது கடந்த 2015-ல் தமிழக ஆளுநரிடம் பாமக அளித்த ஊழல் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளி்டமிருந்து விளக்கம் பெற்று சட்டப்படி உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாமக தலைவர் ஜி.கே.மணி,கடந்த 2015-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பன்னீர்செல்வம் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.2011-ம் ஆண்டு முதல், அமைச்சராக பதவி வகித்தவர்கள், மூத்த அதிகாரிகள், முதல்வர் என அனைவரும் பாகுபாடின்றி ஊழல் புகாரில் சிக்கியுள்ளனர். இதுதொடர்பாக ஆளுநரிடம் 2013 மற்றும் 2015ஆகிய ஆண்டுகளில் 200 பக்கபுகார் பட்டியலை பாமக வழங்கியது. அதை ஆளுநர், கடந்த 2015-ம்ஆண்டு தலைமைச் செயலருக்கு அனுப்பியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என தெரிவித்து இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kPUcdx
via
No comments