ஏகாம்பரநாதர் கோயில் அருகே நவீன வசதிகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதி: கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதால் விரைவில் திறக்கப்படும்
காஞ்சிபுரம் நகரில் பிரசித்திப் பெற்ற ஏகாம்பர நாதர், வரதராஜ பெருமாள், காமாட்சியம்மன், சித்ரகுப்தன், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளதால், இத்தலம் கோயில் நகரமாக விளங்கி வருகிறது. இக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வடமாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆன்மிக சுற்றுலா வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நகரில் பக்தர்கள் தங்குவதற்காக கோயில்நிர்வாகங்கள் சார்பில் விடுதிகள்,வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் இருந்ததால், ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஓரிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3innOfB
via
No comments