Breaking News

அனல்மின் நிலையம் சாம்பல் கொட்டியது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வு; எண்ணூர் கழிமுக பாதிப்புகளை சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கோரிக்கை

எண்ணூர் அனல் மின் நிலையம் கொட்டும் சாம்பலால், எண்ணூர் கழிமுகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எண்ணூர் கழிமுகப் பாதுகாப்புக் குழு மற்றும் மீனவ மக்களின் அழைப்பை ஏற்று, நீரியல் வல்லுநர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் மற்றும் மீனவ அமைப்பு நிர்வாகிகள், எண்ணூர் கழிமுகப் பகுதியில், அனல் மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3r3IVHu
via

No comments