யூரோ கோப்பை: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து; ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரதான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ள நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில், 2-வது அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து. 1966-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், மேற்கு ஜெர்மனியை வீழ்த்திய பிறகு, இங்கிலாந்து எந்த ஓரு பெரிய கால்பந்து தொடரிலும் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யூரோ கோப்பையின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரின் வெம்பிலி மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், இங்கிலாந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இங்கிலாந்து இத்தாலி அணிகள் மோதும் இறுதி ஆட்டம், இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yGekme
via
No comments