லயோனல் மெஸ்ஸி அசத்தல் ஆட்டம்: அரை இறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் ஈக்வேடார் அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டத்தால் அர்ஜென்டினா 3-0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
பிரேசிலின் கோயானியா நகரில்நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 26-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்தின் மீது பட்டு விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. 37-வது நிமிடத்தில் ஈக்வேடார் அணி வீரர் வெலன்சியா தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக விலகிச் சென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36dhGAO
No comments