அரவிந்த் சாமி நடித்த 'நரகாசுரன்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியீடு?
அரவிந்த் சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள 'நரகாசுரன்' திரைப்படம் ஓ.டி.டி.-யில் வெளியாகவிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் 'நரகாசுரன்' படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம், கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் கடந்த நான்கு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது.
தற்போது அந்தப்படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. SONY LIV தளத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி படம் வெளியிடப்படும் எனக்கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hJGbMt
No comments