Breaking News

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து 345 ரன்கள் முன்னிலை

ஜோ ரூட் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் , இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹசீப் ஹமீத் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

image

பின்னர் டேவிட் மலானும், கேப்டன் ஜோ ரூட்-டும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மலான் 70 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் இரண்டு டெஸ்ட்களைப் போன்று, மூன்றாவது டெஸ்ட்டிலும் ரூட் சதம் அடித்து அசத்தினார். அவர் 121 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 2ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியை விட 345 ரன்கள் முன்னிலையுடன் அந்த அணி வலுவான நிலையில் உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2UPWMWi
via

No comments