அடுத்த ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் பெறும் வகையில் தமிழக வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்: விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தகவல்

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் நேற்று கூறியதாவது:
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்தில் உள்ள தரத்துக்கு ஏற்பவிளையாட்டு மைதானம் அமைத்துபயிற்சி அளிக்கப்படும் என்ற அடிப்படையில்தான் சென்னையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 4 இடங்களில்விளையாட்டு அகாடமி அமைக்கப்பட உள்ளன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு உதவி செய்வதற்கு என தனியாக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xvJVWD
via
No comments