நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.
ராணுவத்தில் இளநிலை அதிகாரியாக உள்ள நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டனும் ராணுவத்தில் கவுரவ அதிகாரியுமான எம்.எஸ்.தோனி வாழ்த்து தெரிவிப்பதாக அணியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனையை போற்றும்வகையில் ‘8758‘ என்ற எண்ணுடன்கூடிய சிறப்பு சீருடை வெளியிடப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.வெள்ளி வென்றவர்களுக்கு தலா 50 லட்சமும் வெண்கலம் வென்றவர்களுக்கு தலா 25 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3CuXYPN
via
No comments