Breaking News

கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் பெரியநாயக்கன்பாளையம் ரயில்நிலையத்தில் நின்று செல்லுமா?- மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை பெரியநாயக்கன் பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் பயணிகள் ரயில், பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம்நின்று செல்வது வழக்கம். இதனால் தினந்தோறும் பள்ளி, கல்லூரி களுக்கு செல்லும் மாணவர்கள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த பயணிகள் ரயில்சேவையை பயன்படுத்தி வந்தனர்.கடந்த 2020 மார்ச் முதல் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை யாக கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் 2021 மார்ச்மாதம் முதல் சிறப்பு ரயில் சேவையாக பயணிகள் ரயில் இயக்கப்படு வதால், இடையில் காரமடை ரயில் நிலையத்தில் மட்டும் ரயில் நின்று செல்கிறது. மேட்டுப்பாளையம்-கோவை இடையே பயண கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயிலில் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BeV4x7
via

No comments