Breaking News

லார்ட்ஸ் டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம்; இங்கிலாந்து முன்னிலை

இங்கிலாந்து - இந்தியா இடையே லார்ட்ஸில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 180 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 129 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 37 ரன்னிலும், ஜடேஜா 40 ரன்னிலும் வெளியேறினர்.

image

இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 49 ரன்னில் ஷமியிடம் வீழ்ந்தார். பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார்.

ஆனால் கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதமடித்தார். மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூ 180 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இப்போது இங்கிலாந்து அணி இந்திய அணியை காட்டிலும் முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய பந்துவீச்சாளர்களில் சிராஜ் 4 விக்கெட், இஷாந்த் சர்மா 3, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3g6v9Qm
via

No comments