Breaking News

கடைசி நேரத்தில் கிடைத்த ஒலிம்பிக் வாய்ப்பு: டோக்கியோ விரைந்த இந்திய வீராங்கனை

கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பு காரணமாக, ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக இந்திய கோல்ப் வீராங்கனை தீக்ஷா தாகர் டோக்கியோ புறப்பட்டுச் சென்றார்.
 
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருந்த தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரியா நாட்டு வீராங்கனைகள் கடைசி நேரத்தில் விலகினர். இதையடுத்து அடுத்த வாய்ப்பில் இருந்த இந்திய வீராங்கனை தீக்ஷா தாகருக்கு, ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
 
இதையடுத்து 20 வயதான செவித்திறன் மாற்றுத்திறனாளியான தீக்ஷா தாகர் டோக்கியோ புறப்பட்டுச் சென்றார். பெண்களுக்கான கோல்ஃப் போட்டிகள் வருகிற 4 ஆம் தேதி தொடங்குகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xrdBUZ
via

No comments