பண்பாட்டை பாழ்படுத்தும் மது போதை: தற்காப்புக் கொலைகளில் பெண்களுக்கு கைகொடுக்கும் ஐபிசி 100

மது போதையால் ஏற்படும் கலாச்சார சீரழிவின் உச்சமாக, முறையற்ற பாலியல் வக்கிரங்கள் அரங்கேறுகின்றன. அதனால் கடந்த சிலநாட்களில் தமிழகத்தில் சில கொலைகள் நடக்க, அது தற்காப்பு நிகழ்வாக கருதி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.
மதுரையில் 2012-ம் ஆண்டு பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கணவரை அவரது மனைவி கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்தார். இது இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 100-ன்படி,‘‘தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலை என்பதால் குற்றமல்ல” என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் அந்த பெண் விடுவிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hZptso
via
No comments