அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய 19 வயது லேலா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில் டீன் ஏஜ் வீராங்கனை, லேலா பெர்ணான்டஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின், மகளிர் காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் 19 வயதான லேலா பெர்ணான்டஸ், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.
அதிரடியாக விளையாடிய லேலா 6-3, 3- 6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக அவர், நடப்பு சாம்பியன் நவோமி ஓசாகா, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோரை வீழ்த்தியிருந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள மெட்வடேவ், நெதர்லாந்தின் போடிக் சான்ட்ஸ்கல்ப்பை எதிர்கொண்டார். முதல் இரு செட்களை கைப்பற்றிய மெட்வடேவ், 3-வது செட்டை இழந்தார். எனினும் சுதாரித்த அவர் 4-வது செட்டை கைப்பற்றி, தொடர்ந்து 3-வது முறையாக அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3l0gibP
via
No comments